Friday, August 21, 2009

திராவிட மொழிகள்
தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, 'திராவிட மொழிகளின் ஒப்பியலிலக்கணம்' என்ற நூலையெழுதிய கால்டுவெல் அடிகளார், 1856ல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தானிலுள்ள பலூச்சிஸ்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர். இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சிறிதும் பெரிதுமாகச் சுமார் 73 மொழிகள்[1] வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.

வரலாறு
கிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து.[2] திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது..[2] ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை விட்டு விட்டார்கள் ஹரப்பா, மொஹெஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. சி.ச. குறியீட்டுகளை யாரும் இன்னும் அடையாளம் கண்டு கொண்டு, அது இந்த மொழிதன் என்று யாராலும் சொல்ல முடியவில்லை
திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
தென் திராவிடம்
தென்-நடுத் திராவிடம்
நடுத் திராவிடம்
வட திராவிடம்
வகைப்படுத்தப்படாதவை
என்பனவாகும்.
இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படௌத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன.

திராவிட மொழிகளின் பட்டியால்

தென் திராவிட மொழிகள்
தமிழ்-கன்னடப் பிரிவு
கன்னடப் பிரிவு
படகு
ஹோலியா
கன்னடம்
ஊராலி

தமிழ்-குடகு பிரிவு
குடகு
குடகு
குறும்பா
ஆலுக் குறும்பா
ஜென்னுக் குறும்பா
முள்ளுக் குறும்பா

தமிழ்-மலையாளம்
மலையாளம்
ஆரநாடன்
காடர்
மலையாளம்
மலப்பந்தரம்
மலயரயன்
மலவேடன்
பழியான்
பனியா
ரவுலா
தமிழ்
இருளா
கைக்காடி
முதுவன்
ஷோலகா
தமிழ்
பெட்டாக் குறும்பா
யெருக்குல
மன்னான்


தோடா-கோட்டா
கோட்டா
தோடா

துளு பிரிவு
பெல்லாரி
குடியா
கொரகா
கொற்ற கொரகா
முது கொரகா
துளு

தென்-நடுத் திராவிட மொழிகள்
கோண்டி-கூய்
கோண்டி
தந்தாமி மாரியா
கிழக்கு முரியா
தூர மேல் முரியா
தென் கோண்டி
வட கோண்டி
கிர்வார்
மாரியா
மேற்கு முரியா
நாகர்ச்சால்
பர்தான்
கொண்டா-கூய்
கொண்டா
மண்டா-கூய்
கூய்-குவி
கோயா
கூய்
குவி
மண்டா-பெங்கோ
மண்டா
பெங்கோ


தெலுங்கு
செஞ்சு
மன்னா டோரா
சவாரா
தெலுங்கு
வட்டர்


நடுத் திராவிட மொழிகள்
கோலமி-நைக்கி
வடமேற்குக் கோலமி
தென்கிழக்குக் கோலமி
பார்ஜி-கடாபா
மூதிலி கடாபா
பொட்டங்கி ஒல்லார் கடாபா
துருவா


வட திராவிட மொழிகள்
பிராகுயி
குமர்பாக் பஹாரியா
குறுக்ஸ்
நேபாளி குறுக்ஸ்
சௌரியா பஹாரியா மொழி


வகைப்படுத்தப்படாதவை
அல்லர்
பாசிகர்
பாரியா
காமர்
கணிக்காரன்
குறிச்சியா
மலங்குறவன்
விஷாவன்

No comments:

Post a Comment