Friday, August 21, 2009

கடவுள்

கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச் சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர். வேற் சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை இறைவன் அல்லது ஆண்டவன் எனவும் அழைக்கிறார்கள்.
கடவுள்-தேடு பொருள், மனிதனிடம் அனேக சக்திகள் இருந்தும்,அடுத்தவரை சார்ந்து வாழும் குணம் மட்டும் அப்படியே தான் இருக்கிறது.கடவுளை தேடுவதிலே குறியாய் இராமல்,உங்கள் குடும்பத்தையும் கொஞ்சம் பாருங்கள்.

No comments:

Post a Comment