Friday, August 21, 2009

சமசுகிருதம்

சமசுகிருதம்
இந்தியாவின் மிகப்பழைய மொழிகளுள் ஒன்று. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். எனினும் இந்து சமயத்தின் நான்கு வேதங்கள், பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குஜராத்தி, மராட்டி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய நவீன வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் சமசுகிருத வார்த்தைகள் இருப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment